மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் தமிழகமெங்கும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார், அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது என்றும், இக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும். என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மக்கள் பிரச்சனைக்காக போராடுகிற இந்த கூட்டணியில் நான் திருச்சியில் போட்டியிட தலைவர் ராகுல் காந்தி வாய்ப்பு கொடுத்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ராகுல் தலைமையில் ஆட்சி அமையும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி, மோடி மீது மக்களுக்கு அதிகமான வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்றும், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…