தமிழகத்தில் கல்லூரிகள் ஜூன் 18ம் தேதி திறப்பு!

Default Image

கல்லூரிக்கல்வி இயக்கக அதிகாரிகள்,தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்பட்டு வரும்  1,543 கல்லூரிகளில் செமஸ்டர் விடுமுறைக்கு பின் ஜூன் 18ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என  தெரிவித்தனர்.

தமிழகத்தில் 91 அரசுக் கல்லூரிகள், 8 அரசு கல்வியியல் கல்லூரிகள், 40 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 1,243 தனியார் கல்லூரிகள் என மொத்தம் 1,543 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்லூரி கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, கல்லூரி திறப்பு தொடர்பாக கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

ஆய்வகத்தை பயன்படுத்தும் பாடப்பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 40 இடங்களும், ஆய்வகம் பயன்படுத்தாத பாடப்பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 60 இடங்களுடன் பாடப்பிரிவு தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து கூடுதல் இடங்கள் தேவைப்பட்டால் ஆய்வு நடத்தப்பட்டு, கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு கல்லூரிகளில் செமஸ்டர் விடுமுறை முடிந்து, ஜூன் 18ம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன.

தற்போது கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிவடைந்தபின் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கும் தேதியை பல்கலைக்கழக நிர்வாகங்கள் முடிவு செய்யும். ஜூலை 1ம் தேதியோ அதற்கு முன்னதாகவோ வகுப்புகள் திறக்கப்படும். இவ்வாறு கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்