தமிழகத்தில் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்கள் குறித்த இறுதி அட்டவணை விரைவில் வெளியிடப்படும் !அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்கள் குறித்த இறுதி அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், மருத்துவ இடங்கள் தொடர்பான எண்ணிக்கையில் எந்த குளறுபடியும் இல்லை. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க தேவையான உதவி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நட்டா கூறினார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.