தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைபெய்தது..!
சென்னையிலும், புறநகர் பகுதியிலும் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், சில பகுதிகளில் பெய்த மழை வெப்பத்தைத் தணித்துள்ளது. திருவெற்றியூர், மாதவரம் , புழல், அம்பத்தூர், ஆவடி , பூந்தமல்லி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த மழை இரண்டு மணி நேரம் நீடித்தது.
காஞ்சிபுரத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுயிலும் மூன்றாவது நாளாக மழை பெய்தது. இதனால், கோடையின் தாக்கம் தணிந்து குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சூளகிரி முதல் கோனேரிப்பள்ளி வரை 7 கிலோமீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.
சேலத்தில், பழைய பேருந்து நிலையம், 5 ரோடு, சூரமங்கலம், ஜங்சன், கோரிமேடு, அஸ்தம்பட்டி, சீலநாயக்கன் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.