தமிழகத்தில் இன்று முதல் இவை கட்டாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு!

Published by
Edison

இன்று முதல் அனைத்து வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஐ கடந்து அதிகரித்துள்ள நிலையில்,115 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது.  இதனைத் தொடர்ந்து,ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.

தமிழகத்தை பொறுத்தளவில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு,தீவிரமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு வருகிறது. ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்க மத்தியக் குழு 10 மாநிலங்களுக்கு செல்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.குறிப்பாக,தடுப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த தேவையான ஆலோசனை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் அனைத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது:

“கொரோனா அபாயம் மற்றும் அபாயமில்லாத அனைத்து வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் வீடுகளில் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.எட்டாவது நாள் கொரோனா இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்தால் வெளியில் வர வேண்டும்.

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொண்டாட வேண்டும்.ஆனால்,நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கூட்டமாக கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.வெளிமாநிலங்களுக்கு சென்றும் புத்தாண்டு கொண்டாடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

மேலும்,தமிழகத்தில் ஒமிக்ரான் பாதித்த 34 பேரில் 12 பேர் குணமடைந்துள்ளனர்.எனினும்,வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.அவர்களின் மாதிரிகள் அடுத்தக்கட்ட பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.5 நாட்களில் பரிசோதனை முடிவு தெரிய வரும்.

மேலும்,ஞாயிற்றுக்கிழமை (இன்று) 16 வது கொரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில்  நடைபெறவுள்ளது.இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ளதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே,இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

Live : மணிப்பூர் கலவரம் முதல்…பிரேசில் சென்றடைந்த பிரதமர் மோடி வரை…!

Live : மணிப்பூர் கலவரம் முதல்…பிரேசில் சென்றடைந்த பிரதமர் மோடி வரை…!

சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…

4 mins ago

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு!!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

40 mins ago

பார்டர் கவாஸ்கர் டிராபி : ‘இந்தியா ஜெயிக்கிறது கடினம் தான்’ …மனம் திறந்த ஹர்பஜன் சிங்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…

1 hour ago

“நன்றி என்றால் என்னவென்றே தெரியாத தலைவர்”.. எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!!

சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…

2 hours ago

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

14 hours ago

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

14 hours ago