தமிழகத்தில் ஆணவம் பிடித்தவர்கள்….ஆணவக் கொலைகளை அரங்கேற்றுகிறார்கள்..!!பால்வளம் அதிரடி..!!
தமிழகத்தில் ஆணவம் பிடித்தவர்களால் ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக பால்வளத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவரிடம் திராவிடக் கட்சிகளால் தான், தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக கூறிய பாஜகவின் எச்.ராஜா விமர்சனம் செய்தது தொடர்பாக கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர், திராவிடக் கட்சிகள் ஆட்சியில் மட்டும் தான் தமிழகம் மறுமலர்ச்சி அடைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஆணவம் பிடித்தவர்களால் தான் இந்த ஆணவக் கொலைகள் எல்லாம் நடைபெறுவதாக குற்றம் சாட்டிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.