தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. மட்டுமே அங்கீகாரம் பெற்ற கட்சிகள்!

Published by
Dinasuvadu desk
நாடு முழுவதும் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. இவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்தாலும், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெறுவதற்கு சில விதிமுறைகளை பூர்த்தி செய்தாக வேண்டும். இப்படி பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் குறித்து தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி 56 தேசிய மற்றும் மாநில கட்சிகள் உள்பட மொத்தம் 1,866 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட 7 கட்சிகள் தேசிய கட்சிகளாகவும், சில கட்சிகள் மாநில கட்சிகளாகவும் அங்கீகாரம் பெற்றுள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் என 154 கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ளன. இதில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய 3 கட்சிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்று இருப்பதாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட முடியாது. தேர்தல் கமிஷன் ஒதுக்கும் சின்னங்களில் ஒன்றையே இந்த கட்சிகள் தேர்தலில் பயன்படுத்த முடியும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
Published by
Dinasuvadu desk

Recent Posts

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…

10 mins ago

லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!

சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…

28 mins ago

மக்களே! தமிழகத்தில் (25.09.2024) புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

33 mins ago

பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…

48 mins ago

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…

1 hour ago

பிக்பாஸ் சீசன் 8 எப்போது தொடங்குகிறது? போட்டியாளர்கள் யார்? விவரம் இதோ!!

சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…

1 hour ago