தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. மட்டுமே அங்கீகாரம் பெற்ற கட்சிகள்!

Default Image
நாடு முழுவதும் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. இவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்தாலும், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெறுவதற்கு சில விதிமுறைகளை பூர்த்தி செய்தாக வேண்டும். இப்படி பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் குறித்து தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.Image result for bjp congress communist
அதன்படி 56 தேசிய மற்றும் மாநில கட்சிகள் உள்பட மொத்தம் 1,866 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட 7 கட்சிகள் தேசிய கட்சிகளாகவும், சில கட்சிகள் மாநில கட்சிகளாகவும் அங்கீகாரம் பெற்றுள்ளன.Image result for aiadmk flag
தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் என 154 கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ளன. இதில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய 3 கட்சிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்று இருப்பதாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.Image result for dmk flag
தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட முடியாது. தேர்தல் கமிஷன் ஒதுக்கும் சின்னங்களில் ஒன்றையே இந்த கட்சிகள் தேர்தலில் பயன்படுத்த முடியும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.Image result for dmdk flag

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்