தமிழகத்திற்கு ரயில் மூலம் நிவாரணப் பொருட்கள்….சரக்கு கட்டணம் ரத்து…மத்திய ரயில்வே அறிவிப்பு…!!

Default Image

தமிழகத்திற்கு பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.

கஜா புயலின் பாதிப்பை அடுத்து சேதமடைந்த பகுதிகளுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் பிற வெளி மாநிலங்களிலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. இதற்கும் சரக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி இருந்தார்.இதனையடுத்து நிவாரணப் பொருட்களுக்கு டிசம்பர் 10-ம் தேதி வரை சரக்கு கட்டணத்தை ரத்து செய்வதாக மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்