தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை!
இன்று மாலை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை, செவிலிமேடு, பூக்கடைசத்திரம், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்தது. ஒரு மணிநேரத்துக்கும் மேல் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர், காட்பாடி பாகாயாம், சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் இதமான சூழல் நிலவியது.
கடலூர் மாவட்டத்தில் நகர்ப் பகுதி மற்றும் சிதம்பரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்ததால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சாலைகளில் சென்றன.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. அரை மணி நேரம் நீடித்த மழையினால் வெப்பம் தணிந்து விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
புதுச்சேரியில் நகரப் பகுதிகள், திருக்கனூர், மடுகரை, வில்லியனூர் ஆகிய இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.