தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலந்தாய்வு நிகழ்வில் குளறுபடி!நள்ளிரவு வரை ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்!
கலந்தாய்வு நிகழ்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் நள்ளிரவு வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை வரை கலந்தாய்வு நடைபெறவில்லை. பலமணி நேரம் காத்திருந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் குடும்பத்துடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பல மணி நேரம் அங்கு காத்திருந்த பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
புதுக்கோட்டையில் கலந்தாய்வு நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். நள்ளிரவு 2 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் நடந்த தொடக்க மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் இரவு வரை காத்துக் கிடந்தும் காலிப்பணியிடங்கள் ஒட்டப்படாததால் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.