தமிழகஅரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடாமல் தடுக்க சட்டரீதியிலான நடவடிக்கையை எடுத்துள்ளது!அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
மத்திய அரசு எங்களை நம்பினால் நாங்கள் அவர்களை நம்புவோம், நம்பவில்லையெனில் நாங்களும் நம்பமாட்டோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,மத்திய அரசு எங்களை நம்பினால் நாங்கள் அவர்களை நம்புவோம், நம்பவில்லையெனில் நாங்களும் நம்பமாட்டோம் .மேலும் மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஒரே நேரத்தில் வந்தாலும் சந்திக்க தயார்.அதேபோல் தமிழகஅரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடாமல் தடுக்க சட்டரீதியிலான நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.