தனுஷ்கோடியில் புயல் எச்சரிக்கை ! 70 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று.! சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

Default Image

தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.தனுஷ்கோடியில் 70 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று: சுற்றுலா பயணிகளுக்கு தடை

மேலும் தெற்கு அரபிக் கடல், வங்க கடலில் அதிக காற்று வீசி வருவதால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காணப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தொண்டி, பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களாக தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பனைமர உயரத்துக்கு அலைகள் எழுகின்றன. இதன் காரணமாக நேற்று சுற்றுலா பயணிகள் தனுஷ் கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 5-வது நாளாக இன்றும் அதே நிலைமை தொடர்கிறது.Image result for தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் 70 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசுகிறது. இதனால் ராமேசுவரம் முதல் பாம்பன் சாலையில் இருந்த பழமையான மரங்கள் முறிந்து விழுந்தன.

காற்றின் வேகம் காரணமாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் ஊர்ந்து செல்கின்றன.

அரிச்சல்முனை, முகுந்த ராயர் சத்திரம், தனுஷ்கோடி சாலை காற்றின் காரணமாக மணலால் மூடப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்