தனி மாவட்டமாக பொள்ளாச்சியை அறிவிக்க வேண்டும்! பொள்ளாச்சி ஜெயராமன்
சட்டப்பேரவை துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர் இதனை கூறினார். தென்னை நாரிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்கள் சீனா, ஜப்பான் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணியை ஈட்டித்தருவதாக அவர் தெரிவித்தார். மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கிடைக்கக்கூடிய நீரை சேமிக்க தடுப்பணைகள் கட்டித்தர வேண்டும், என்று அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், கோரிக்கைககள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.