தனியார் பள்ளி ஆசிரியர்களை விட…….. அரசு பள்ளி …..ஆசிரியர்களே மிகவும் தகுதி வாய்ந்தவர்கள்………அமைச்சர் தாக்கு…!!!!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டு வலசு பகுதியில் சுமார் ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் தரம் வாய்ந்தவர் என்றும் கூறினார்.
இதில் பங்கேற்று பேசிய அவர் தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் தகுதிதேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று ,பலமுறை புத்தாக்க பயிற்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது,என்றும் எனவே அரசு பள்ளி ஆசிரியர்கள் மிகவும் தரம் வாய்ந்தவர்கள் என்று மதுவிளக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்….