தனியார் நிறுவனங்களில் இருந்து மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யும் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்! மு.க.ஸ்டாலின்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் கன்சல்டன்சி நிறுவனங்களில் இருந்து தேர்வு செய்யும் அரசியல் சட்ட விரோத அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி மத்திய அரசின் முக்கியத் துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய அதிகாரிகள் இடம்பெறுவதைத் தடுக்கும் ஆதிக்க மனப்பான்மையை அடியோடு கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அரசியல் சட்ட விரோத நியமனங்களை பாஜக அல்லாத அனைத்து மாநில முதலமைச்சர்கள் எதிர்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.