தனியார் தொலைக்காட்சி பெண் செய்தியாளர் ஷாலினி உயிரிழப்புக்கு சரத்குமார் இரங்கல்!
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தனியார் தொலைக்காட்சி பெண் செய்தியாளர் ஷாலினி உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில்,
தனியார் தொலைக்காட்சி பெண் செய்தியாளர் பாரதியாழ் என்கிற ஷாலினி தனது பிறந்ததினத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவரது கேள்விகளுக்கு பதிலளித்த நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ஷாலினிக்கு சிறுவயதிலே ஏற்பட்டிருக்கும் இத்துயர சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.
ஷாலினியை பிரிந்து வாடும் குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.