தனியார் கட்டுமானம் திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் அகற்றாதது குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள தனியார் கட்டுமானத்தை அகற்றாதது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைக்கோவிலின் அடிவாரத்தில் சாரதாஸ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் சார்பில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.விதிகளை மீறி கட்டப்பட்ட இக்கட்டிடங்களை இடிக்க 2012ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஆனால் இன்னமும் கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை என கூறி சுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம்,பஷீர் அகமது அமர்வு தனியார் கட்டிடங்களை அகற்றாதது குறித்து பதிலளிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.