தனியாருக்கு மணல் குவாரிகளை டெண்டர் விட எதிர்ப்பு!
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் செல்ல. இராசாமணி மணல் குவாரிகளை தனியாருக்கு டெண்டர் விட்டால் மீண்டும் முறைகேடாக மணல் விற்பனை செய்ய வழி வகையாக அமையும் என கூறியுள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை இணையதள பதிவு மூலம் அனைத்து லாரிகளுக்கும் விற்பனை செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளதை வரவேற்பதாகவும், மணல் குவாரிகளை தனியாருக்கு டெண்டர் விடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
மேலும் அனைத்து லாரிகளுக்கும் மணல் கிடைக்க வழிவகை செய்யக்கோரி திருச்சி மின்களத்தூரில் செயல்படும் அரசு மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.