தனியாக வாடிவாசலுக்கு காளையோடு வந்த தமிழச்சி…காளை பிடிபட்ட போதிலும்..சிறப்பு பரிசு

Default Image
  • தான் வளர்த்த காளையோடு களத்திற்கு தனியாக வந்த பெண்.
  • காளை பிடிப்பட்டப்போதிலும் பெண்ணிற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது.

இதற்காக அவனியாபுரம் -திருமங்கலம் சாலையில் வாடிவாசல் ஆனது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியினை கண்டுகளிக்கும் விதமாகவும் பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது.வாடிவாசலில்  சீறிப்பாய  700 காளைகள் திமிளை காட்டிவாறு நிற்கின்றன இந்த காளைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அவற்றிற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் பங்கேற்க திண்டுக்கல், தேனி, கம்பம் மற்றும் திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளில் இருந்து வருகின்ற  காளைகள் அனைத்தும் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்ட பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் அவர்களின் தலைமையிலான குழுவானது இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைத்தனர். சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வாடிவாலுக்கு பெண் ஒருவர் தந்தனியாக தான் வளர்த்த காளையோடு ஜல்லிக்கட்டில் பங்கேற்றார்.அவருடைய காளை சீறிப்பாய்ந்து வெளியே வந்த போது மாடுபிடி வீரர்களால் பிடிக்கப்பட்டது.இருந்தப்போதிலும் தான் வளர்த்த காளையோடு வாடிவாசலுக்கு காளையை கொண்டு வந்த பெண்ணை ஊக்குவிக்கும் விதமாகவும் அவருடைய துணிச்சலை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு பட்டுச்சேலை ஒன்று சிறப்பு பரிசாக அளிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்