“தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு விலக்கு வேண்டும்” கோர்ட்டில் விசாரணை..!!
வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் குடிநீர் பாக்கெட் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட தடையிலிருந்து விலக்கு அளிக்க கோரிய வழக்கில் மாநில அரசின் முதன்மை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பால், தயிர், எண்ணெய் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர,மக்காத பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் , 1986-ன் கீழ் தடை செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த உத்தரவு பாக்கெட் குடிநீர் உற்பத்தியாளர்களை வெகுவாக பாதிக்கும் எனக்கூறி, விலக்கு அளிக்க வலியுறுத்தி, பாக்கெட் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்தான விசாரணை, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து, அரசின் முதன்மை செயலாளர் வரும் 27-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை அன்றைய தேதிக்கே ஒத்தி வைத்தார்.
DINASUVADU