தடை செய்யப்பட்ட ஹூக்கா பயன்படுத்திய சென்னை விடுதியில் சோதனை!
தடை செய்யப்பட்ட ஹூக்கா போதைப் பொருள் சென்னையில் பயன்படுத்திய விடுதியில் போலீசார் நேற்றிரவு சோதனை நடத்தி 8 பேரை கைது செய்துள்ளனர்.
நுங்கம்பாக்கம் ஜெகன்னாதன் சாலையில் உள்ள கெஸ்டோ கஃபே என்ற உணவு விடுதியில் போதைப் பொருளான ஹூக்கா பயன்படுத்தப்பட்டு வருவதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றிரவு போலீசார் அந்த விடுதியின் உள்ளே திடீரென சோதனை நடத்தினர். அப்போது ஹூக்கா பயன்படுத்திய உணவு விடுதி பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதே கெஸ்டோ கஃபேயில் தற்போது 3வது முறையாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. போலீசார் சோதனை நடத்துவதும், குறிப்பிட்ட விடுதி மீண்டும் ஹூக்கா பயன்படுத்துவதும் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.