தஞ்சை : வருமான வரி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்….!

Published by
Venu

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் வருமானவரி அலுவலகத்துக்குள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது.

காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு போராட்டத்தில் குதித்துள்ளது.

அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த 15 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 90 சதவிகிதம் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் கடைகள் மூடப்பட்டன. குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. மற்ற மாநில பேருந்துகளும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 5-ஆவது நாளாக திமுக மறியல் போராட்டம் நடத்தி வருகிறது. சென்னை அண்ணா சாலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மறியல் செய்து கைதாகினர் .

இந்நிலையில்  தஞ்சாவூரில் வருமான வரி அலுவலகத்துக்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியினர் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். திடீரென வருமான வரி அலுவலகத்துக்குள் புகுந்த நாம் தமிழர் கட்சியினர் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த அலுவலர்களை வெளியேற்றிவிட்டு உட்புறம் கதவைப் பூட்டிக்கொண்டனர்.

காவல்துறையினர் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டும் போராட்டக்காரர்கள் வெளியே வர மறுத்துவிட்டனர். நெடுநேரம் பேச்சு நடத்தியபின் வெளியே வந்த போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.தற்போது வரை பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” திமுகவை விமர்சித்த த.வெ.க.தலைவர் விஜய்!

“எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” திமுகவை விமர்சித்த த.வெ.க.தலைவர் விஜய்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  “நீட் தேர்வை…

6 minutes ago

அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…

56 minutes ago

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…

1 hour ago

“இந்திய அணியின் ராணி” ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

2 hours ago

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

3 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

4 hours ago