தஞ்சை பெரிய கோவிலில் திடீரென கதண்டு வகை வண்டு தாக்குதல்!அலறியடித்து ஓடிய பக்தர்கள்!5 பேர் காயம்
கதண்டு வகை வண்டு தஞ்சை பெரிய கோவிலில் தாக்குதலால் பக்தர்கள் அலறியடித்து ஓடியதையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது.
2-வது நுழைவு வாயிலான கேரளாந்தகன் கோபுரத்தில் கதண்டு கூடு உள்ளது. கோபுரத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் கட்டுமானக் கம்பி குத்தியதில் கதண்டு கூடு சேதமடைந்து நூற்றுக்கணக்கில் வெளியேறிய வண்டுகள் பக்தர்களையும் தொழிலாளர்களையும் தாக்கத் தொடங்கின. இதையடுத்து பக்தர்கள் அலறியடித்து ஓடினர். காயம் அடைந்து மயக்கம் அடைந்த 5 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல பக்தர்களும் சிறு காயமடைந்தனர். கதண்டு கூட்டை அகற்ற பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் சென்னையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும் என்று கூறி தொல்லியல் துறையினர் தள்ளிப்போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினரையும் தாங்களே வண்டுகளை அப்புறப்படுத்துவதாகக் கூறி தொல்லியல் துறையினர் திருப்பி அனுப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.