நாம் தமிழர் கட்சியினர் 51 பேர் தஞ்சையில் வருமான வரி அலுவலகத்திற்குள் நுழைந்து உட்புறமாக பூட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ,அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தஞ்சையில் வருமான வரி அலுவலகத்திற்குள் புகுந்த நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்த அலுவலர்களை வெளியேற்றிவிட்டு உட்புறம் கதவைப் பூட்டிக்கொண்டனர்.
காவல்துறையினர் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டும் போராட்டக்காரர்கள் வெளியே வர மறுத்துவிட்டனர். நெடுநேரம் பேச்சு நடத்தியபின் வெளியேவந்த போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 51 பேர் மீதும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் மிரட்டுதல், அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைதல், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…