தஞ்சையில் மணியரசன் தாக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது!தினகரன்
டிடிவி தினகரன் மணியரசன் தாக்கப்பட்டது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என கூறியுள்ளார். விவசாயிகளின் உரிமைகளை முன்னெடுத்து போராடுபவர்களை முடக்க நினைக்கும் செயல் சதித்திட்டம் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று இரவு தஞ்சையில் தமிழ் தேசிய பேரியக்க தலைவரும், காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு சென்னை செல்ல பைக்கில் தஞ்சை ரயில் நிலையம் நோக்கி சென்றபோது மர்ம நபர்கள் இருவர் இவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினர்.தஞ்சை மருத்துவமனையில் மணியரசன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.