தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில்..!இருந்து வெளிநாட்டுக்குச் சிலைகள் கடத்தல்..?
தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல், அங்கிருந்த சிலைகள் வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தலை மறைக்க அருகில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்த சிலைகளை எடுத்து மாரியம்மன் கோவிலில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்துச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து தனி அலுவலர், குருக்கள் முன்னிலையில் சிலைகளை ஆய்வு செய்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்