தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம்!ஆனால் அமைச்சர் பதவி கிடையாது!முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இன்று மாலை நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நேற்று டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையக்குழு விழிப்புணர்வு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்தும் குழுவுக்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கர்நாடகா இன்னும் உறுப்பினர்களை நியமிக்காமல் உள்ளது.
எனவே உடனடியாக நியமித்து, கூட்டத்தை கூட்டி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. விரைவில் அணை நிரம்பி விடும்என எதிர்பார்க்கிறோம். 90 அடி நிரம்பியவுடன் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கதமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம். அது மிகவும் பாராட்டுக்குரியது. தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைந்தாலும் அவருக்கு, அமைச்சர் பதவி வழங்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.