டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது!
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காவிரி ஆற்றில் கர்நாடக அரசு தொடர்ந்து நீர் திறக்க ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. ஆணைய கூட்டத்தில் தமிழக பிரதிநிதியான பொதுப்பணி முதன்மை செயலாளர் பிரபாகர் பங்கேற்கிறார்.
ஜூலை-ஆகஸ்ட்டில் 80டிஎம்சி நீரை கர்நாடகா திறக்க தமிழக பிரதிநிதி வலியுறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.காவிரி விவகாரத்தில் கர்நாடகா மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகுவது தவறு என சுட்டிக்காட்டப்படும் .நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு 11 டிஎம்சி நீர் வந்துள்ளது.