டெல்டா மாவட்ட மக்களுக்கு கரம் கொடுக்கும் சென்னை இளைஞர்கள்…!!
புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சென்னை இளைஞர்கள் அனுப்பி வைத்தனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு, பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து, சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை லாரி மூலம் அனுப்பி வைத்தனர். பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட இயக்குனர் மோகன் உள்ளிட்டோர் இந்த நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சமூக வலைதளங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் இளைஞர்களின் முயற்சியை, கிரிக்கெட் வீரர் சேவாக் டுவிட்டரில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அதிகளவில் நிவாரண பொருட்கள் கிடைத்துள்ளதாக தன்னார்வ இளைஞர்கள் தெரிவித்தனர்.
dinasuvadu.com