டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..!
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுவரும் கடுமையான மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் உபரி நீர் வெளியேற்றபட்டு வருகின்றன.இந்த உபரி நீர் அதிகமாக வருவதால் ஒகேனக்கல் அணை நிரம்பி வருகிறது
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெறுகினால் பல அருவிகள் நீரில் மூழ்கியுள்ளன.ஒகேனக்கலில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டது.அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
இதனால் சேலத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குடிநீர் தேவைக்காக 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு. விவசாயிகள் காவிரியிலிருந்து வரும் நீரை கண்டு மகிழ்ச்சி!