டெங்கு காய்ச்சலுக்கு வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் பூஜா (வயது 16), ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். அவருக்கு கடந்த 3-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. உடனடியாக மாணவியை அவரது பெற்றோர் சென்னையில் உள்ள அரசினர் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பூஜா நேற்று முன்தினம் இறந்து விட்டார்.இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
dinasuvadu.com
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…