டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 18 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம், டீசல் விலை மற்றும் சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 18 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
இதனால், நாடு முழுவதும் 7 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயங்காது என சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஜிந்தர் சிங் கூறியுள்ளார்.
ஒரே நேரத்தில் டீசல் விலை, சாலைப் பயன்பாட்டுக்கான சுங்கக் கட்டணம், மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை என அனைத்தும் உயர்த்தப்பட்டதால் லாரி தொழிலையே செய்ய முடியாத அளவுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தவிர்க்க முடியாத சூழல் காரணமாகவே வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.