டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன..!

Default Image

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது.இந்தப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது . இதன் அறிமுக போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 2-வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

Image result for திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி வாரியர்ஸ்இந்த நிலையில் 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. 3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்க உள்ளன. மாலை 3.15 மணி, இரவு 7.15 மணி ஆகிய நேரங்களில் நடைபெறும். ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்துள்ள நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. முதல் தகுதி சுற்று ஆட்டம் நெல்லையிலும், வெளியேற்றுதல் சுற்று மற்றும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் திண்டுக்கல்லிலும், இறுதிப்போட்டி சென்னையிலும் நடத்தப்படுகிறது.

Image result for திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி வாரியர்ஸ்டி.என்.பி.எல். போட்டியின் தொடக்க விழா நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 6.10 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. சூப்பர் சிங்கர் குழுவினரின் இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்களும் உறுதிமொழி எடுப்பதுடன், பேட்டில் கையெழுத்திடுகின்றனர்.

தொடக்க விழா முடிந்ததும் இரவு 7.15 மணிக்கு தொடங்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
TN CM MK Stalin - TVK Leader Vijay - Governor RN Ravi
TN Governor RN Ravi - Tamilnadu Chief minister MK Stalin
hmpv virus in india
power cut image
Legislative Assembly Session