டிடிவி…தொல்.திருமா சந்திப்பு…!!!அரசியல் வட்டாரத்தில் புதிய கூட்டணி உருவாகிறதா….??
கஜா புயல் 6 மாவட்டம் உள்ளிட்ட தஞ்சை,புதுக்கோட்டை,நாகை,திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்கள் பலத்த சேதடைந்தது.இதனால் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சிலர் தங்கள் வீடுகள் ,வளர்ப்பு பிராணிகள் என அனைத்தையுமே இழந்து தவித்து வருகின்றனர்.அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிய நிலையில் அம்மாவட்டத்தில் மக்கள் அடிப்படை பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர்.இதனால் பலர் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் TTVதினகரனுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பானது புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க செல்லும்போது வழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தார் TT தினகரன் என்ற தகவல் வெளியாகியுள்ளது .