தூத்துக்குடியில் ஆயுதப்படை வளாகத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது ஏறி இளைஞர்கள் 3 பேர் சினிமா பாடல் ஒன்றுக்கு டிக் டாக் வீடியோவை பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடவே இந்த வீடியோ சமூகவலைதலங்களின் வைரலானது.இதனை கண்ட காவல்துறை வாகனத்தில் மீது ஏறி டிக்டாக் வீடியோ பதிவு செய்த இளைஞர்கள் யார் என்று தென்பாகம் போலீசார் விசாரணையில் இறங்கினர்.விசாரணையின் இறுதியில் முனியசாமிபுரம் மற்றும் லெவஞ்சிபுரத்தை சேர்ந்த ஷேக்குவாரா, சீனு, கோகுலகிருஷ்ணன் என்பது தெரியவரவே 3 பேரையும் பிடித்த தென்பாகம் போலீசார் அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் டிஎஸ்பி பிரகாஷ் மற்றும் எஸ்.பி. ராஜாமணி ஆகியோருக்கும் வீடியோவின் வீரியம் தெரியவரவே டிக்டாக் இளைஞர்களுக்கு அறிவுரைகளை வழங்கிய கையோடு தண்டனையும் வழங்கினார்.தண்டனை என்னவென்றால் தூத்துக்குடி மார்க்கெட் சிக்னலில் எட்டுமணி நேரம் நின்று போக்குவரத்தை சரி செய்யவேண்டும் என்பதும் தான் இந்த தண்டனையை ஏற்ற 3 இளைஞர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டது தண்டனை அன்று அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடனும் காவல்துறை பணி எவ்வளவு சிரமமானது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இந்த தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…