டிக்டாக் பரிதாபம்: காவல் வாகனத்தின் மீது ஏறி ஆட்டம்-போலீசின் புருவம் உயர்த்தும் தண்டனை- தூத்துக்குடியில் தூக்கல் சம்பவம்

Default Image
  • தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசாரின் வாகனத்தின் மீது ஏறி சினிமா பாட்டிற்கு ஆட்டம் போட்டு அதனை டிக்டாக்கில் பதிவு செய்த 3 இளைஞர்கள்.
  • டிக்டாக்  வீடியோவை வெளியிட்ட  இளைஞர்களை கண்டுபிடித்த காவல்துறை வித்தியாசமான முறையில் அவர்களை தண்டித்துள்ளது .

தூத்துக்குடியில் ஆயுதப்படை வளாகத்தின் முன்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் மீது ஏறி இளைஞர்கள் 3 பேர் சினிமா பாடல் ஒன்றுக்கு டிக் டாக் வீடியோவை பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடவே இந்த வீடியோ சமூகவலைதலங்களின் வைரலானது.இதனை கண்ட காவல்துறை வாகனத்தில் மீது ஏறி டிக்டாக் வீடியோ பதிவு செய்த  இளைஞர்கள் யார் என்று தென்பாகம் போலீசார் விசாரணையில் இறங்கினர்.விசாரணையின்  இறுதியில் முனியசாமிபுரம் மற்றும் லெவஞ்சிபுரத்தை சேர்ந்த ஷேக்குவாரா, சீனு, கோகுலகிருஷ்ணன் என்பது தெரியவரவே  3 பேரையும் பிடித்த தென்பாகம் போலீசார் அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் டிஎஸ்பி பிரகாஷ் மற்றும் எஸ்.பி. ராஜாமணி ஆகியோருக்கும் வீடியோவின் வீரியம் தெரியவரவே டிக்டாக் இளைஞர்களுக்கு அறிவுரைகளை வழங்கிய கையோடு தண்டனையும் வழங்கினார்.தண்டனை என்னவென்றால் தூத்துக்குடி மார்க்கெட் சிக்னலில்  எட்டுமணி நேரம் நின்று போக்குவரத்தை சரி செய்யவேண்டும் என்பதும் தான் இந்த தண்டனையை  ஏற்ற 3 இளைஞர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டது தண்டனை அன்று அவர்களை  நல்வழிப்படுத்தும் நோக்கத்துடனும் காவல்துறை பணி எவ்வளவு சிரமமானது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இந்த தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள்  தரப்பில் கூறப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்