நாகர்கோவில் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான நாஞ்சில் முருகேசன், தற்போது அக்கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லை. ஒழுகினசேரியில் இவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்குகிறது. அங்குள்ள பாரை முருகேசன் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு டாஸ்மாக் நேரம் முடிந்த பின் விற்பனை நடந்ததாகவும், போலி மதுவகைகள் விற்றதாகவும் போலீசார் வடசேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், போலீஸ் சீருடை அணிந்த சிலர்தான் வாளியில் மதுவகைகளை உள்ளே கொண்டுசென்றதாகவும், இந்தக் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருப்பதாகவும் முருகேசன் கூறியுள்ளார்.
தன் மீது பொய் வழக்கு தொடர காரணமான டாஸ்மாக் கடை, தனது நிலத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமென வலியுறுத்திய அவர், இன்று கடை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
டாஸ்மாக் நிர்வாகத்துடன் பேசி முடிவெடுப்பதாக ஊழியர்கள் கேட்டுக் கொண்டதன்பேரில், முருகேசன் போராட்டத்தை கைவிட்டார். இதையடுத்து ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு கடை திறக்கப்பட்டது.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…