ஜெ.வின் அனைத்து சொத்துக்களும் அதிபதியானது எப்படி…!
ஜெயா தொலைகாட்சி தலைமை நிர்வாகியும் ஜாஸ் சினிமாஸ் என்ற பெரிய நிறுவனத்தின் அதிபரும் ஆன விவேக் ஜெயராமன் என்பவர் சசிகலாவின் உறவினர் என்பதை விட புரட்சித் தலைவி ஜெயலலிதா கொள்ளையடித்து சம்பாதித்த சொத்துக்களின் பினாமி முதலாளி என்று சொல்வதே சரியாக இருக்கும். சுதாகரன் என்ற ஆளை வளர்த்தெடுத்து பின்னர் விரட்டிவிட்ட பின்னர் இந்த விவேக் ஜெயராமன்தான் ஜெயலலிதாவின் அறிவிக்கப்படாத வளர்ப்பு மகனாக திகழ்ந்துவந்தார். ஜெயலலிதாவின் பெரும்பாலான சொத்துக்களுக்கு பினாமி அதிபர் என்றாலும் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் முழு அதிபராகிவிட்டார். இந்த நபரின் சொத்துக்கள் குறித்த விசாரணையை வருமானவரித்துறை ஏன் முன்பே நடத்தியிருக்கக் கூடாது? இப்போது நடத்தியிருந்தாலும், கணக்கில் வராத ஏராளமான சொத்துக்களைக் கண்டுபிடித்திருந்தாலும் சட்டத்தின் முன்னர் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பார்களா என்பதும் ஐயமே!