அந்த வாக்கு மூலத்தில் சசிகலா கூறியிருப்பதாவது: 2016 செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டனில் உள்ள முதல் தளத்தில் இரவு 9.30 மணியளவில் பாத் ரூமில் ஜெயலலிதா பல்துலக்கிக்கொண்டு இருந்தார்.
அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு உடனடியாக நான் அந்த அறைக்கு சென்றேன். அப்போது, டாக்டர் சிவக்குமார் ஜெயலலிதாவின் உடலை பரிசோதனை செய்தார். தொடர்ந்து அவர் அப்போலோ மருத்துவமனை டாக்டர் விஜயகுமார் ரெட்டிக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து ேபாயஸ்கார்டனுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்குமாறு தெரிவித்தார். தொடர்ந்து இரண்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. மயங்கி கிடந்த ஜெயலலிதாவை இரண்டு தனிபாதுகாப்பு அதிகாரிகள் துணையோடு ஸ்டெக்சரில் அவரை தூக்கி வைத்து ஆம்புலன்சிற்கு கொண்டு சென்றோம். ஆம்புலன்சில் நானும், டாக்டர் சிவக்குமாரும் இருந்தோம். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஜெயலலிதா கண்விழித்தார். அப்போது, எங்கு கொண்டு செல்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். நான் அவரிடம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறினேன்.
ஜெயலலிதாவுக்கு 19ஆம் தேதியன்று காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், அவர் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவர் 20, 21ம் தேதி நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் கூறினார். அவர் அன்றைய தினத்தில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த போதும் கலந்து கொண்டார். அதனால், 22ம் தேதி அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. இதனால், அன்று நடக்கவிருந்த அரசு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. 22ம் தேதி உடல் நலம் சரியில்லாமல் இருந்த அவரை இரண்டு முறை டாக்டர் சிவக்குமார் பரிசோதனை செய்தார். ஜெயலலிதாவை மருத்துவமனை கொண்டு செல்ல வேண்டும் என்று சிவக்குமார் பரிந்துரை செய்தார். ஆனால், ஜெயலலிதா மருத்துவமனைக்கு வர மாட்டேன் என்று கூறினார். கடந்த 2014 செப்டம்பரில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற போது அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், உடல் நலம் கடுமையாக பாதித்தது. குறிப்பாக, ஜெயலலிதாவின் உடல் நிலையில் சர்க்கரை நோயின் அளவும், ரத்த அழுத்தமும் அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால், அவருக்கு சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர தனியாக மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். தோல் மருத்துவரும் நியமிக்கப்பட்டிருந்தார். 2016ம் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜெயலலிதா உடல் நிலை சரியாக வில்லை. நீரிழிவு மருத்துவர், தோல்நோய் மருத்துவர்கள் பரிசோதனை செய்து குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மாத்திரைகளை அளித்தனர். செப்டம்பர் 16ம் தேதிவரை மாத்திரை சாப்பிட்டார். ஜெயலலிதா தினசரி சர்க்கரை நோய் அளவை அவரே தினமும் பரிசோதித்து வந்தார்.
2014 நவம்பர் முதல் செப்டம்பர் வரை 20 டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் சிகிச்சை அளித்தனர். அந்த டாக்டர்கள் குறித்த விவரங்கள் மற்றும் அவர்கள் எங்கு பணி செய்து வருகின்றனர் என்ற விவரங்களையும் இணைத்துள்ளேன். அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த போது, செப்டம்பர் 27ம் தேதி காவிரி பிரச்சனை குறித்து மருத்துவமனையில் அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். அப்போது தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ், அட்வகேட் ஜெனரல் முத்துக்குமரசாமி, ஜெயலலிதா ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், தனிப்பிரிவு செயலாளராக இருந்த ராமலிங்கம், வெங்கட்ராமன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜெயலலிதா அளித்த ஆலோசனையின் படிதான் பிரமாண பத்திரம் தயாரானது. செப்டம்பர் 22 முதல் 27ம் தேதி வரையில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், சி.விஜயபாஸ்கர், துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தனர். செப்டம்பர் 27ம் தேதி ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது தள அறையில் இருந்து தரைத்தளத்தில் உள்ள ஸ்ேகன் மையத்திற்கு ஸ்டெக்சரில் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவரது பாதுகாப்பு அதிகாரி வீர பெருமாள், பெருமாள்சாமி அவரை பார்த்தனர்.
அவர்களிடம் ஜெயலலிதா பேசினார். அப்போது, ஜெயலலிதா நான் நலமாக இருக்கிறேன். டாக்டர்கள் சிறிது நாட்கள் இருக்க சொன்னார். விரைவில் வீட்டிற்கு வந்து விடுவேன்’ என்றார். அக்டோபர் 22ம் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவ் அப்ேபாலோ மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, ஜெயலலிதா அவரை பார்த்து கையசைத்தார். கவர்னர் புத்தகமும், பழக்கூடையும் கொடுத்து நலம் விசாரித்தார். நவம்பர் 19ம் ேததி ஜெயலலிதாவை தனி அறைக்கு மாற்றினார்கள். அப்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் உள்ளிட்ட ஒரு சில அமைச்சர்கள் ஜெயலலிதாவை பார்த்தனர். டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதா நன்றாக பேசி கொண்டிருந்தார். ஆனால், திடீரென மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். எக்ேமா தெரபி சிகிச்சை தரும் போது நான் பக்கத்தில் தான் இருந்தேன். ஜெயலலிதாவிடம் பேச்சு கொடுத்து கொண்டே இருங்கள் என்று என்னிடம் டாக்டர்கள் கூறினர். என்னால் தாங்க முடியவில்லை. அக்கா, அக்கா என்று காது அருகே கதறினேன். ஜெயலலிதா மயக்கம் போட்டவுடன் நானும் மயங்கி விட்டேன். ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது, அவரது அனுமதியுடன் நான் 4 வீடியோக்களை எடுத்தேன். அதைத்தான் தற்போது விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…