ஜெயலலிதா வீடியோவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது உறுதி-தேர்தல் அதிகாரி கார்த்திகேயன்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார். அதனையடுத்து அந்த விடியோவை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஒளிபரப்ப கூடாது என்று கூறியதால், அந்த வீடியோவின் ஒளிபரப்பு சமூக வலைத்தளங்களில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், தேர்தல் நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன் தேர்தலை மையப்படுத்தி எவ்வித பரப்புரையும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். வீடியோ ஒளிபரப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு126(1)(பி)ஐ மீறுவதாகும். எனவே, இந்த வீடியோ குறித்த ஆய்வினை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க விசாரணை குழு அமைக்கப்படும் என்றும், தினகரன் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
source: https://www.dinasuvadu.com/