ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்று ஆஜரானார். விசாரணையின் போது 2011-ஆம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டபோது, உளவுப்பிரிவு டிஐஜியாக இருந்த பொன். மாணிக்கவலிடம், அப்போதைய நிலவரம் குறித்து கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சசிகலா வெளியேற்றப்பட்ட போது, வேதா இல்லத்தில் இருந்த சூழல், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்தவர்கள் யார்? யார்? மீண்டும் சசிகலாவை ஜெயலலிதா ஏற்றுக் கொண்ட பின் அங்கிருந்த சூழல் உள்ளிட்டவை குறித்து பொன் மாணிக்கவேலிடம் கேட்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதையடுத்து, ஜெயலலிதாவின் பள்ளித் தோழி ஃபதர் சயத் என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே மூன்றாவது முறையாக ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்