“ஜெயலலிதா மரணம் நீங்கா சர்சை” நாற்காலியில் அமர்ந்தார் ஜெ…!!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் ராஜ்பிரசன்னா ஆஜராகி தன்னுடைய தரப்பு விளக்கம் அளித்தார்.அப்போது அவர் அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோது 59 நாள்களில் 120 முறை அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதா சக்கர நாற்காலியில் அமர்ந்தது குறித்த சர்ச்சை இன்றுவரை நீடித்துவரும் நிலையில், அதுகுறித்து தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ள ராஜ் பிரசன்னா, “நவம்பர் 9-ம் தேதி முதல் 13 -ம் தேதி வரையிலான பிசியோதெரபி சிகிச்சையின்போது ஒருநாள் மட்டும் 56 நிமிடங்கள் ஜெயலலிதா சக்கர நாற்காலியில் அமர்ந்தார்’’ என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், ஜெயலலிதாவுக்குக் கை, கால்கள் மற்றும் மார்பகப் பகுதிகளில் பிசியோதெரபி செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.தொடர்ந்து மறைத்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விடைகள் மக்களின் சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இல்லை..
DINASUVADU