ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது லண்டனில் இருந்து வந்து சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வீடியோ கான்பிரன்சிங் முறையில் விசாரிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதேபோல் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது.மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.அதேபோல் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேரில் விசாரிக்க ஆணையம் ஆலோசனை நடத்தி வருகின்றது.
அதேபோல் ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் அக்டோபர் 24 -க்குள் விசாரணையை முடிக்க தீவிரமாகியுள்ளது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…