ஜெயலலிதா புகைப்படம் நீக்க கோரிய வழக்கு..! உயர் நீதிமன்றம் தள்ளுபடி …!
சென்னை உயர் நீதிமன்றம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் முடிவை எதிர்த்தும், அரசு அலுவலகம் மற்றும் திட்டங்களில் அவரது புகைப்படம் மற்றும் பெயர் சூட்டுவதை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது.
உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாவில் தொடர்ந்து சமாதிகள் அமைக்கப்பட்டால் அதன் தன்மை பாதிக்கும் என டிராஃபிக் ராமசாமி உள்ளிட்ட 5 மனுதாரர்கள் தரப்பு தொடர்ந்துள்ள பொதுநலமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு திட்டங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்து நீக்க உத்தரவிடவும் மனுதாரர் தரப்பு கோரியிருந்தது. வழக்கின் இன்றைய விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால், மனுக்களை தள்ளுபடி செய்வதாக தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. வழக்கசென்னைறிஞர்கள் தரப்பில் முறையிட்டதை அடுத்து மீண்டும் விசாரிக்கக்கோரி மனுதாக்கல் செய்தால் ஏற்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.