மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை டிசம்பர் 5ம் தேதி அரசு சார்பில் அனுசரிக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.
அதன் பிறகு சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருபரங்குன்றம் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற போதுகட்சி சின்னம் வழங்குவது தொடர்பான படிவத்தில் அவர் சுய நினைவுடன் தான் கைரேகை வைத்தாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
உயிருடன் இருக்கும் போது பதிவு செய்த கைரேகைக்கு இறந்த பிறகு பதிவு செய்த கைரேகைக்கும் இருக்கும் வித்தியாசம் குறித்து தடய அறிவியல் துறை மூலமாக தான் அறிய முடியும். எனவே இந்த சர்ச்சைகள் அனைத்தும் விசாரணை முடிவடைந்து அறிக்கை தாக்கல் செய்யும் போது,கைரேகை தொடர்பாக தடய அறிவியல் துறை அறிக்கை வரும் போது தான் முழு விவரங்கள் தெரியவரும்.
எனவே டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா நினைவு தினத்தை அரசு சார்பில் அனுசரிக்க அரசுக்கு தடைவிதிக்க வேண்டும் என வழக்கறிஞர் குமரவேல் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, ஒருவருடைய மரண தேதியை தீர்மானிக்க கூடிய நிபுணத்துவம் மற்றும் அனுபவமும் நீதிமன்றத்திற்கு இல்லை. மேலும் மருத்துவமனை சான்று அடிப்படையில் இறப்பு சான்று பெறப்பட்டுள்ளது.
பிறப்பு, இறப்பை தீர்மானிப்பதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறபிக்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…