ஜெயலலிதா சசிகலா ராஜதுரோகம் செய்து விட்டதாக கூறினார்!மருது அழகுராஜ்

Default Image

மருது அழகுராஜ் கூறியதாவது, சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ராஜதுரோகம் புரிந்தவர்கள் என தம்மிடம் ஜெயலலிதா கூறியதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் ஆஜரான பின்  தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. நாளிதழின் ஆசிரியராக பணியாற்றி வரும் அவர், முன்னர் நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தப் பணியாற்றினார். இதன் அடிப்படையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்த மருதுஅழகுராஜ், 2011 ஆம் ஆண்டு சசிகலா போயஸ்தோட்டத்தை விட்டு வெளியேற்றப் பட்டபோது தம்மை அழைத்து ஜெயலலிதா பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலாவை வெளியேற்றியதில் கருத்துவேறுபாடு இருந்தால் நீங்களும் வெளியேறிவிடலாம் என கூறியதாகவும், ஆனால், தொடர்ந்து பணியாற்ற தாம் விருப்பம் தெரிவித்ததை அடுத்து, ஜெயலலிதா ஒப்புதல் அளித்ததாகவும் ஆறுமுக சாமி ஆணையத்தில் மருது அழகுராஜ் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா இறக்கும் வரை சசிகலா குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை என்றும்அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்