ஜெயலலிதா ஒரு வாரம் கழித்து அப்போலோவில் சேர்ந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன்!கருணாஸ் பகீர் தகவல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாதிரி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மாதிரி சட்டசபையில் இரங்கல் தெரிவித்தனர்.
திமுகவின் மாதிரி சட்டப்பேரவையில் கருணாஸ் பேசுகையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுபவர்களை சுட வேண்டும் என்று தான் நினைத்தார்கள். இது நிர்வாக சீர்கேட்டின் அடையாளமாகவே இருக்கிறது என்று திமுகவின் மாதிரி சட்டப்பேரவையில் கருணாஸ் பேசியுள்ளார்.
நான் அமைச்சராகி இருப்பேன் (கருணாஸ்):
ஜெயலலிதா ஒரு வாரம் கழித்து அப்போலோவில் சேர்ந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன்.ஜெயலலிதா இருக்கும்போது வெளி மாவட்டம் செல்ல காவல்துறை பாதுகாப்பு எனக்கு இருந்தது. துப்பாக்கிச் சூடு சம்பவம் பேரவையில் பேசியதால் பாதுகாப்பை விலக்கிவிட்டார்கள். தவறுகளை சுட்டிக் காட்ட கூடாது என அரசு நினைக்கிறது என்றும் கூறியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என முதல்வர் கூறலாமா? சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ரூ.4 லட்சம் கேட்கிறது. விரைவில் ஸ்டாலின் தலைமையில் புதிய சட்டமன்றம் அமையும் என்றும் கருணாஸ் பேசியுள்ளார்.
நான் அமைச்சராகி இருப்பேன் (கருணாஸ்):
ஜெயலலிதா ஒரு வாரம் கழித்து அப்போலோவில் சேர்ந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன்.ஜெயலலிதா இருக்கும்போது வெளி மாவட்டம் செல்ல காவல்துறை பாதுகாப்பு எனக்கு இருந்தது. துப்பாக்கிச் சூடு சம்பவம் பேரவையில் பேசியதால் பாதுகாப்பை விலக்கிவிட்டார்கள். தவறுகளை சுட்டிக் காட்ட கூடாது என அரசு நினைக்கிறது என்றும் திமுகவின் மாதிரி சட்டப்பேரவையில் கருணாஸ் பேசியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.