நேற்று விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பினர் ராமராஜ்யம் அமைக்க கோரி ரதயாத்திரை வந்தனர்.
உத்திரபிரதேசம் என தொடக்கி 6 மாநிலங்கள் வழியாக கேரளா கடந்து தமிழக எல்லைக்குள் வந்தது. ரதயாத்திரை அனுமதி அளிக்க கூடாது என பல்வேறு கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி கைது செய்ய பட்ட வேளையில் சட்ட மன்றத்தில் எதிர் கட்சிகள் கடும் புயலை கிளப்பினார்..
திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் வெளிநடப்பு செய்து மறியல் போராட்டம் செய்தனர்.திமுக செயல் தலைவர் முக. ஸ்டாலின் உட்பட அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கபட்டனர்.பல்வேறு குற்றசாட்டுகளுக்கு ஆளாகி உள்ளது ரத யாத்திரை.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பிரிவினைவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவிடும் வகையில் நடைபெற்று வரும் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை, ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்துக்குள் நுழைந்திருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
அத்வானியின் ரத யாத்திரை தமிழகத்துக்குள் கொண்டுவரப்படவில்லை என தெரிவித்த திருநாவுக்கரசர், ஜெயலலிதா இல்லாததாலேயே பாஜனவினர் ஆட்டம் போடுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…