ஜெயலலிதா ஆரம்பத்தில் இருந்தே கவலைக்கிடம் …!ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை..!எய்ம்ஸ் மருத்துவர்கள் பகீர் தகவல்
சென்னையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டெல்லி எய்மஸ் மருத்துவர்கள் ஜி.சி கில்னானி, அஞ்சன்டிரிகோ, நிதிஷ் நாயக் ஆகியோர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை அளிக்க வந்த நிலையில் நேற்று ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
நேற்று அதன்படி எய்மஸ் மருத்துவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்கள்.அப்பலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து கவலைக்கிடமாகவே இருந்துள்ளார் என்பதை மருத்துவ ஆவணங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை, சிகிச்சையை மேற்பார்வையிடவே அழைக்கப்பட்டோம்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU